Home இந்தியா போதை மருந்து விவகாரம்- தீபிகா படுகோன் மேனேஜருக்கு சம்மன் !

போதை மருந்து விவகாரம்- தீபிகா படுகோன் மேனேஜருக்கு சம்மன் !

போதை மருந்து பயன்படுத்தும் விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோன் மேனேஜருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

என் மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டார்.. அவர்தான் கொலையாளி.. கதறும்  சுஷாந்தின் தந்தை! | Rhea is the murderer of my son: Sushant's father KK  Singh - Tamil Filmibeat

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், அந்த மரணத்தில் போதை மருந்து தொடர்பு இருப்பதை கண்டறிந்த நிலையில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரபர்த்தியை கைது செய்தனர். அதையடுத்து நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கைது செய்து அவர்களையும் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.

என் மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டார்.. அவர்தான் கொலையாளி.. கதறும்  சுஷாந்தின் தந்தை! | Rhea is the murderer of my son: Sushant's father KK  Singh - Tamil Filmibeat

இந்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவாத் கூறிய விமர்சனம், மாநிலங்களை வரை எதிரொலித்தது. மும்பையில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் காரணமாக தற்போது தீபிகா படுகோனின் மேனேஜரை விசாரணைக்கு ஆஜராக கூறியுள்ளனர். சமீபத்தில் அந்த உரையாடலை வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

SSR case: NCB summons Deepika Padukone's manager Karishma - DTNext.in

தீபிகாவை டிவிட்டரின் சீண்டியுள்ள கங்கனா, ”போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள், தங்கள் மேனேஜர்களிடம் பொருள் இருக்கிறதா என கேட்பார்கள்” என நேரடியாகவே சீண்டியிருந்தார். முன்னதாக, சுஷாந்த் சிங் மரணத்தின்போது, அது குறித்து கருத்து தெரிவித்த தீபிகா, ”சுஷாந்த் சிங் மரணம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக” தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், தற்போது போதை தடுப்பு பிரிவு போலீசார் ’டேலண்ட் ஏஜென்சி’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தீபிகா மேனேஜருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே லாரியில் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை, ஓட்டுநர்களை தாக்கிவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு...

“நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்!

சீனாவில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஹீலோங்ஜியாங். இப்பகுதியில் வசித்து வரும்...

மழையில் டான்ஸ் ஆடியபடியே ஓட்டு கேட்ட கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

இன்னும் இரு வாரங்களே உள்ளது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க...

‘சிறுமிக்கு பாலியல் தொல்லை’ கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரி!

திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மின்வாரிய அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை...
Do NOT follow this link or you will be banned from the site!