சொந்த ஊர் திரும்ப முயன்ற தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

சொந்த ஊர் திரும்ப முயன்ற தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் திரும்ப முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, அவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்ப முயன்ற தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – உச்ச நீதிமன்றம் உத்தரவுஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடக்க நிலையில் இருந்தபோது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வாழ வழியின்றி லட்சக் கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முயன்றனர். வண்டி வசதி இல்லாதவர்கள் நடந்தே சொந்த ஊர் திரும்பத் தொடங்கினர். பல இடங்களில் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், தொடர்ந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது தொடர்பான செய்தி சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தினம் தினம் வந்துகொண்டே இருந்தது. எதிர்க்கட்சிகள் இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடி வந்தது. கடைசியில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது கூட யாரும் நடந்து செல்லவில்லை, அரசு ரயில் வசதி செய்து தருகிறது என்றெல்லாம் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

சொந்த ஊர் திரும்ப முயன்ற தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – உச்ச நீதிமன்றம் உத்தரவுஇந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது, ஊரடங்கு காரணமாக வேறு நகரங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு 15 நாட்களுக்குள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கட்ணடம் வசூலிக்கக் கூடாது. ஊர் சென்று சேரும் வரை உணவு, தண்ணீர் போன்ற வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரடங்கை மீறியதாக தொழிலாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.
தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப சிறப்பு ரயலை மாநில அரசுகள் கேட்டால், ரயில்வே துறை 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்து தர வேண்டும். சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.