ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம்11! – ரூ.222 கோடிக்கு டீல் ஓகே

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம்11! – ரூ.222 கோடிக்கு டீல் ஓகே

பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ட்ரீம் 11 என்ற விளையாட்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஐ.பி.எல் முதன்மை விளம்பரதாரராக (டைட்டில் ஸ்பான்சராக) சீனாவின் வீவோ மொபைல் நிறுவனம் இருந்து வந்தது. இந்தியா – சீனா மோதல் தொடர்பாக பல்வேறு அழுத்தம் ஏற்படவே, டைட்டில் ஸ்பான்சரில் இருந்து வீவோ விலகியது. அதைத் தொடர்ந்து ஜியோ, அமேசான், பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சர் பெற முயற்சி செய்தன.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம்11! – ரூ.222 கோடிக்கு டீல் ஓகே
இந்த நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ட்ரீம் 11 நிறுவனம் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சரைக் கைப்பற்றியுள்ளது. 2018ம் ஆண்டு வீவோ நிறுவனத்துடன் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம்11! – ரூ.222 கோடிக்கு டீல் ஓகே

இந்திய கிரிக்கெட் வாரியம் வீவோவுடனான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம்11! – ரூ.222 கோடிக்கு டீல் ஓகே
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்காக வீவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ.440 கோடி கொடுத்திருந்தது. வரும் ஆண்டுக்கான போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு ட்ரீம் 11 நிறுவனம் ரூ.222 கோடி வழங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.