“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும்” அம்பேத்கர் குறித்து தலைவர்கள் புகழாரம்!

 

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும்” அம்பேத்கர் குறித்து தலைவர்கள் புகழாரம்!

அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அவர் குறித்த கருத்துக்களை பகிர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார்கள். குறிப்பாக தி,முக தலைவர் ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்தநாள முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும்” அம்பேத்கர் குறித்து தலைவர்கள் புகழாரம்!

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டரில், “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் இந்திய அரசியல் சாசனத்தின்தந்தை சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரது வழியில் சமநீதி,சமத்துவம் தழைத்தோங்கிட, ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதிஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி.,கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ” சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்” என்ற டாக்டர் B. R. அம்பேத்கரின் வாக்கை பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “இந்திய அரசியல் சாசன சிற்பி, எல்லோரும் சம உரிமை பெற பாடுபட்ட போராளி, சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை பிறந்தநாளில் போற்றிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்வோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.