குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

 

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

18 வயதுக்கு உட்பட்ட சிறப்பு எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படுமென சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதில் அளித்து வருகிறார்கள். ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இப்படி ஒரு செயலை செய்வதாக குற்றஞ்சாட்டி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

இதையடுத்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆண்டு தோறும் சிறந்த மூன்று எழுத்தாளர்களை தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழுடன் ‘கவிமணி விருது’ வழங்கப்படும் என்றும் சிறந்த ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.