பார்க்க கூடாது என்று அணை போட்டாலும் உடைத்துக்கொண்டு வேறு பக்கமாக பாயும் மதன் வீடியோ

 

பார்க்க கூடாது என்று அணை போட்டாலும் உடைத்துக்கொண்டு வேறு பக்கமாக பாயும் மதன் வீடியோ

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அதை தடுக்க நினைத்து அணை போட்டால் அது சமயத்தில் வேறு பக்கமாக உடைத்துக் கொண்டு ஓடும். அப்படித்தான் கே.டி.ராகவனின் வீடியோவும் மதன் டைரியின் யூடியூப் இணையதளம் முடக்கமும் இருக்கிறது.

பாஜக பொதுச்செயலாளர் கே. டி. ராகவன் ஆபாச வீடியோவினை வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் மதன் ரவிச்சந்திரன். இதன் பின்னர் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கே. டி. ராகவன்.

பார்க்க கூடாது என்று அணை போட்டாலும் உடைத்துக்கொண்டு வேறு பக்கமாக பாயும் மதன் வீடியோ

இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனும் பாஜக பிரமுகர் தான். விவகாரம் பெரிதானதை அடுத்து மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மதன் கௌரி என்கிற தனது யூடியூப் இணைய பக்கத்தில் தான் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். மதன் வெளியிட்ட சில நேரங்களில் சில ஆயிரம் ஆயிரம் வாசகர்கள் மட்டுமே பார்க்கப்பட்டு இருந்தது. ஊடகங்களில் எல்லாம் தகவல் வெளியாகி பரபரப்பு ஆனதும் பல லட்சம் வாசகர்களை சென்றடைந்தது. இதன் அதிகம் விளம்பர வருமானம் வருவதாக நடிகை கஸ்தூரியும் கூட குறிப்பிட்டிருந்தார். அவர், கரும்பு தின்ன கூலி என்பது என்னவென்றால்- sting operation மூலம் வாங்கியாச்சு மானம் , அதுக்கு youtube விளம்பர வருமானம் ! #veralevel அடுத்தது யார்? அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல புகார் குடுக்கும் புனிதர்களுக்கா? என்று குறிப்பிட்டிருந்தார்.

பார்க்க கூடாது என்று அணை போட்டாலும் உடைத்துக்கொண்டு வேறு பக்கமாக பாயும் மதன் வீடியோ

அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருவதால் விளம்பரத்தின் மூலம் யூடியூப் வருமானமும் வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மதன் டைரி என்கிற யூடியூப் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது இணையதளம் முடக்கப்பட்டாலும் கூடஅந்த வீடியோ வேறு வேறு புதிய முகவரி மூலம் வேறு வேறு தளங்களில் அப்டேட் ஆகி தொடர்ந்த அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.