Home ஆன்மிகம் கற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க!

கற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க!

‘ஆ’ என்பது முழுமை என அர்த்தம் ஆகும். ‘ரதி’ என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.

கற்பூரம் - Siddharbhoomi

எனவே, ஆரத்தி என்பது கடவுளின் மீதுள்ள முழுமையான அன்பின் வெளிப்பாடு என பொருள்படும். அதனால் தான் ஆரத்தி எடுக்கும் போது மிகுந்த பக்தியுடன், பாடல்கள் பாடி, கைகளை தட்டி, ஆராதனைகள் செய்து தியானத்தில் ஈடுபட்டு கடவுளை வணங்குகின்றனர்.
கடவுள் வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் இறுதியில் கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம்.
கற்பூர ஆரத்தி என்பது சூடம்காண்பித்தல் என்பதாகும்.
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் அனஹட் சக்கரத்தில் அதாவது இறைவனின் இதயம் இருக்கும் பகுதியில் ஆரம்பித்து, அட்ன்ய சக்கர அதாவது கடவுளின் மைய புருவ பகுதி வரை வலமிருந்து சுற்றலாம். பிறகு, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

கற்பூர ஆரத்தி மந்திரம் | Karpoora aarti mantra in tamil

இல்லையெனில், கடவுளைச் சுற்றி வந்து ஆரத்தி காண்பிக்கலாம். நம்மில் பலருக்கும் இது போன்ற சரியான முறை தெரியாமல் ஆரத்தி எடுப்பதால் இதுபோன்ற சடங்குகளினால் கிடைக்கும் பலன்கள் நமக்கு கிடைப்பதில்லை. நாம் தினமும் கடவுளை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் கடவுளுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் கடவுளுக்காக ஆரத்தி மந்திரம் பாராயணம் செய்தால், நம் வேண்டுதலுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்.
ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

பொது பொருள்:
அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியை தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதை கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களை போற்றுகிறேன். வீட்டில் கற்பூரம் காட்டும் போது பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதகள் அனைத்தும் நிறைவேறுவதுடன், அனைத்து வித குபேர சம்பத்துகளுடம் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

ஆரத்தி மந்திரம்

மாவட்ட செய்திகள்

Most Popular

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில்...

மல்டி பிளக்ஸ் திரையரங்கு இனி இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள்,...

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம்...
Do NOT follow this link or you will be banned from the site!