“உங்களால முடியலேனா எங்க மேல பழி போடாதீங்க” – அதிபர் பைடனுக்கு பதிலடி கொடுத்த பேஸ்புக்!

 

“உங்களால முடியலேனா எங்க மேல பழி போடாதீங்க” – அதிபர் பைடனுக்கு பதிலடி கொடுத்த பேஸ்புக்!

கொரோனா இரண்டாம் அலைக்கு இந்தியா எப்படி சின்னாபின்னமானதோ அதேபோல கொரோனா முதல் அலையில் அமெரிக்காவும் சிக்குண்டது. மிக மோசமான பாதிப்பைச் சந்தித்த அமெரிக்கா அதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இரண்டாம் அலையை ஓரளவு கட்டுப்படுத்தியது. ஆகவே அடுத்தடுத்த அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணியை விரைவுப்படுத்தியுள்ளது.

“உங்களால முடியலேனா எங்க மேல பழி போடாதீங்க” – அதிபர் பைடனுக்கு பதிலடி கொடுத்த பேஸ்புக்!

அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தின. இலவச கஞ்சா, இலவச பீர் என தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சலுகைகள் அள்ளிவீசப்பட்டன. இருப்பினும் ஒருசிலர் தடுப்பூசி மீது நம்பிக்கையில்லாமல் அதைப் போட்டுக்கொள்ள அடம்பிடிக்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் எதாவது கூறி தடுப்பூசி போடுவதிலிருந்து தடுக்கிறார்கள். இது அந்நாட்டு சுகாதார துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இச்சூழலில் அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே காரணம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. அதேபோல இம்மாதிரியான மக்களின் மன நிலைக்கு சமூக வலைதளங்கள் தான் காரணம் என அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்திருந்தார். அதில் வரும் தவறான தகவல்களைப் பார்த்துவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதாக அவர் பேசினார். இதனைக் கடுமையாக மறுத்து பேஸ்புக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“உங்களால முடியலேனா எங்க மேல பழி போடாதீங்க” – அதிபர் பைடனுக்கு பதிலடி கொடுத்த பேஸ்புக்!

அந்த அறிக்கையில், “எங்களுடைய தரவுகளின்படி 85 சதவீதம் பேஸ்புக் பயனர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறவர்கள் தான். எனவே அமெரிக்க அதிபரின் இலக்கான ஜூலை 4ஆம் தேதிக்குள்ளாக 70% அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாமல் சென்றதற்கு பேஸ்புக் காரணமில்லை. எங்கள் மீது தேவையில்லாமல் பழி போட வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.