“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

சமூக ஊடகத்தளமான ட்விட்டர் ,பேஸ் புக் ,இன்ஸ்டாக்ராமில் பிரபலங்களை லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர்வதை பார்த்து நாம் பிரமித்து போயிருக்கிறோம் .ஆனால் அதில் பல போலி கணக்குகள் என்றும் ,லட்சக்கணக்கான டாலர்களை கொட்டிக்கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் .

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

இதற்காகவே 54 க்கும் மேற்பட்ட போர்ட்டல்கள் சமூக ஊடகங்களில் உலா வருவதாகவும் ,அவர்களிடம் நமக்கு எத்தனை லட்சம் followers வேண்டுமென்று கூறினால் ,அவைகளை அவர்கள் ரெடி பண்ணி தருவதற்கு டாலர்களில் கூலி வாங்குவதாக கண்டுபிடித்துள்ளனர் .ஆனால் அவையனைத்தும் போலி கணக்குகள் ,சும்மா பெருமைக்காக இப்படி பலர் டாலரில் கொடுத்து வாங்கி ஊடகத்தில் உலா வருகிறார்கள் .

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..சமீபத்தில் மும்பை பாடகர் பூமி திரிவேதி, போலி சுயவிவரத்துடன்(profile ) யாரோ ஒருவர் தன்னை பின்தொடர்ந்ததாக மும்பை போலீசில் புகார் அளித்ததன் மூலம் இது வெளிவந்தது . அதே நபர் மற்ற பாலிவுட் பிரபலங்களைத் தொடர்பு கொண்டு, பூமியின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகிப்பதாகவும், அவரின் ஆன்லைன் பின்தொடர்பவர்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்ததாகவும் கூறினார். மேலும் அவர் ஒரு நடன இயக்குனரையும் தொடர்பு கொண்டார். இந்த நடன இயக்குனர் பூமியுடன் தொடர்புகொண்டு இதை பற்றி கேட்டபோது , ​​அது ஒரு போலி சுயவிவரம்(profile ) என்பதை அவர் உணர்ந்தார் .

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

இந்த மோசடி பற்றி பாடகர் பூமி, மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்து விசாரணை தொடங்கியது. இதை விசாரித்த மும்பை காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரித்தபோது, ​​அவர் போலி பின்தொடர்பவர்களை விற்பனை செய்வதாக போலீசாரிடம் கூறினார். மேலும் அவர் இதுவரை ஐந்து லட்சம் பின்தொடர்பவர்களை வெவ்வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். மும்பை காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட எஸ்ஐடியில் குற்றப்பிரிவு மற்றும் மும்பை காவல்துறையின் சைபர் செல் அதிகாரிகள் உள்ளனர். இந்த எஸ்ஐடி மூலம் இந்த போலி பின்தொடர்பவர்களை யார் வாங்கியது என்று கண்டுபிடிக்க உள்ளார்கள் .