`வலியோ, சோர்வோ இல்லை; ரொம்ப நல்லா இருக்கு!’- பிளாஸ்மா தானம் செய்த முதல் அதிமுக எம்.எல்.ஏ

 

`வலியோ, சோர்வோ இல்லை; ரொம்ப நல்லா இருக்கு!’- பிளாஸ்மா தானம் செய்த முதல் அதிமுக எம்.எல்.ஏ

“கொஞ்சம் கூட வலியோ சோர்வோ இல்லை. ரொம்ப நல்லா இருக்கிறேன். இன்னும் அடுத்த 14 நாள் கழித்து மீண்டும் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. வயதானவர்கள்தான் இந்த நோய்க்கு உயிரிழப்பதாக கூறப்பட்ட நிலையில், வாலிபர்கள், சிறுவர்கள் என அனைவரும் பலியாகி வருகின்றனர்.

`வலியோ, சோர்வோ இல்லை; ரொம்ப நல்லா இருக்கு!’- பிளாஸ்மா தானம் செய்த முதல் அதிமுக எம்.எல்.ஏ

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே கொரோனா சிகிச்சை முடித்தவர்கள் அடுத்த 14 நாட்களில் பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தினால் அவர்கள் குணமடைய வாய்ப்புகள் உள்ளது. அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதல் நபராக பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

`வலியோ, சோர்வோ இல்லை; ரொம்ப நல்லா இருக்கு!’- பிளாஸ்மா தானம் செய்த முதல் அதிமுக எம்.எல்.ஏ

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனாவிலிருந்து குணமாகி வந்து விட்டேன். பிளாஸ்மா தானம் பற்றி கேள்விப்பட்டு நானும் கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் வந்தேன். ரத்ததானம் கொடுக்கும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருந்தது. நம்ம உடம்புல இருந்து ரத்தத்தை எடுத்து மெஷின்ல பிளாஸ்மாவை பிரிச்சு எடுத்துட்டு திருப்பியும் அந்த ரத்தத்தை உடம்பில் ஏற்றிவிட்டார்கள். கொஞ்சம் கூட வலியோ சோர்வோ இல்லை. ரொம்ப நல்லா இருக்கிறேன். இன்னும் அடுத்த 14 நாள் கழித்து மீண்டும் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறவர்களுக்கு, நிறைய பேர் இந்த மாதிரி தானம் கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். இதை எடுத்து அவங்க ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க. ஒரு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாது. இது நிறைய பேருக்கு தேவைப்படும். அதனால நிறைய பேர் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம் நல்ல விஷயம்” என்றார்.