‘குங் ஃப்ளூ’…மீண்டும் கொரோனாவுக்காக சீனாவை பழித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

 

‘குங் ஃப்ளூ’…மீண்டும் கொரோனாவுக்காக சீனாவை பழித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: கொரோனா பரவியதற்கு சீனாவே காரணம் என்று மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 119,654 ஆக உள்ளது. அந்நாட்டில் 22 லட்சத்து 51 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரோனா பரவியதற்கு சீனா தான் காரணமென்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்று அடிக்கடி குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கொரோனாவை வுஹான் வைரஸ் என்று வர்ணித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸை ‘குங் ஃப்ளூ’ என்று கூறியுள்ளார். அதாவது சீனாவின் தற்காப்பு கலையான குங் ஃபூ என்ற வார்த்தையை மாற்றி அவ்வாறு கூறியுள்ளார். மேலும் இதுபோன்று கொரோனாவுக்கு 20 வகையான பெயர்களை தான் யோசித்து வைத்திருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.