21 குண்டுகள் முழங்க… சிவப்பு கம்பளம் விரித்து… விடைபெற்றார் ‘அதிபர்’ டிரம்ப்!

 

21 குண்டுகள் முழங்க… சிவப்பு கம்பளம் விரித்து… விடைபெற்றார் ‘அதிபர்’ டிரம்ப்!

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பளம் விரித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் அரியணை ஏறப் போகும் கிளைமேக்ஸ் காட்சிகள் நெருங்கிவிட்டன. அதன் ஆரம்பமாக அதிபர் டிரம்ப் தனது பிரிவு உபச்சார உரையை முடித்துவிட்டு, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பளம் விரித்து அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

21 குண்டுகள் முழங்க… சிவப்பு கம்பளம் விரித்து… விடைபெற்றார் ‘அதிபர்’ டிரம்ப்!

ஒவ்வொரு புதிய அதிபர் பதவியேற்கும் போதும், முந்தையை அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு அதிகாரங்களைப் பரிமாற்றம் செய்வது வழக்கம். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமையும். ஆனால், அதற்கு டிரம்ப் சிறிதளவும் இடம் கொடுக்கவில்லை. அவர் இப்போது ஆற்றிய உரையில் கூட தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாதவாறே பேசினார்.

தான் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாகக் கூறிய அவர், அமெரிக்க மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று நெகிழ்வுடன் தெரிவித்தார். உரையை முடித்த பிறகு ப்ளோரிடாவிலுள்ள தனது பங்களாவிற்குச் செல்ல ஹெலிஹாப்டரில் பறந்தார். அவர் மரியாதையுடன் வழியனுப்பிவைக்கப்பட்டார். ட்விட்டரில் ஏற்கனவே அவர் கூறியதைப் போல பைடன் பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்கின்றனர். கேபிட்டலில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக இந்த விழாவிற்கு வெள்ளை மாளிகையிலும், வாசிங்டனிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.