“மிதுன லக்னத்தில் பதவியேற்பு… அமாவாசையில் பேரவை கூட்டத்தொடர்” – ஜோதிடத்தை நம்புகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

“மிதுன லக்னத்தில் பதவியேற்பு… அமாவாசையில் பேரவை கூட்டத்தொடர்” – ஜோதிடத்தை நம்புகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

“மிதுன லக்னத்தில் பதவியேற்பு… அமாவாசையில் பேரவை கூட்டத்தொடர்” – ஜோதிடத்தை நம்புகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

அப்போது பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு குறித்தும் ஒன்றிய அரசு சொல் பயன்பாடு குறித்தும் கேள்வியெழுப்பினார். ஆனால் அதற்கு முன்னதாக தனது உரையைத் தொடங்கிய நயினார், “மகாபாரதத்தில் சகாதேவனிடம் போரில் வெற்றி பெறுவதற்காக துரியோதனன் நல்ல நாள் குறித்து கேட்டதாகவும், அப்போது அமாவாசையில் களபலி கொடுத்து போரை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என சகாதேவன் துரியோதனனிடம் கூறினார்.

“மிதுன லக்னத்தில் பதவியேற்பு… அமாவாசையில் பேரவை கூட்டத்தொடர்” – ஜோதிடத்தை நம்புகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

அதேபோல தான் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவர் மார்ச் மாதம் 15ஆம் தேதியன்று மிதுன லக்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மே 7ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்ற நேரத்தில்தான் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினத்தன்று தான் சட்டப்பேரவையின் முதல் கூட்டமும் தொடங்கியுள்ளது” என்றார்.