“மாட்டு கோமியம், சாணம் கொரோனாவை குணப்படுத்தாது… ஆனால் அது நடக்கும்?” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

“மாட்டு கோமியம், சாணம் கொரோனாவை குணப்படுத்தாது… ஆனால் அது நடக்கும்?” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா கொடூரமான உயிர்க்கொல்லியாக மாறிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் என ஆய்வுகள் கூறுகின்றன. தினசரி பலியானோரின் எண்ணிக்கையோ 4 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. மனிதகுலத்துக்கே பேரழிவாக மாறியிருக்கக் கூடிய கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று அறிவியல் வல்லுநர்கள் அறுதியிட்டு சொல்கின்றனர்.

“மாட்டு கோமியம், சாணம் கொரோனாவை குணப்படுத்தாது… ஆனால் அது நடக்கும்?” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் சிலரும் இந்துத்துவ ஆதரவாளர்களும் பசு மாட்டின் கோமியம் குடித்தாலேயே கொரோனாவை விரட்டி விடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது. தடுப்பூசியெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பசு, பசு கோமியம், சாணம் ஆகியவை மட்டுமே. எந்த நோய் வந்தாலும் அதை விரட்ட கோமியம் குடித்தும், சாணத்தை உடல் மீது பூசிக்கொண்டும் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

“மாட்டு கோமியம், சாணம் கொரோனாவை குணப்படுத்தாது… ஆனால் அது நடக்கும்?” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சமீபத்தில் உபி மாநில எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பவர் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்து வீடியோ வெளியிட்டார். அது குடிப்பதால் தன்னை கொரோனா அண்டவில்லை என அறிவிலித்தனமாக மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அதேபோல கடந்த ஆண்டு மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் கோமியம் குடியுங்கள் என்றார். இவர்களால் மக்களும் இதனைப் பின்பற்றுகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் சிலர் வாரம் முறை மாட்டுத்தொழுவத்திற்கு சென்று மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரை உடல் முழுக்க பூசிக் கொண்டு, அது காயும் வரை பொறுமையாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இறுதியில் பால் அல்லது வெண்ணெயால் தங்களது உடலை சுத்தம் செய்து கொள்கின்றனர். அவர்கள் மாடுகளை கட்டியணைத்து மரியாதையும் செய்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று குணமாகிறது என்றும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்துக்குள்ளானது.

“மாட்டு கோமியம், சாணம் கொரோனாவை குணப்படுத்தாது… ஆனால் அது நடக்கும்?” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பசு மாட்டின் கழிவுகள் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்றும், இது மேலும் பல நோய்களை உருவாக்கலாம் எனவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மக்கள் தேவையில்லாமல் இதுபோன்ற செயல்களில் இறங்கி ஆபத்தை விலை குடுத்து வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.