தமிழகத்தில் முழு ஊரடங்கு?… மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

 

தமிழகத்தில் முழு ஊரடங்கு?… மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு?… மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் நிலையை கட்டுக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கைகள் போதாது என்றும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு?… மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

இந்த நிலையில், தமிழகத்தில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் இல்லாததால் அவர்களது பங்களிப்பு குறைந்து விட்டது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முழு பொது ஊடகம் தான் ஒரே வழி. முழு பொதுமுடக்கம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகளுக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.