இறந்த கொரானா நோயாளி -உடலை எரிந்த டாக்டர் -கதற வைக்கும் காரணம் .

 

இறந்த கொரானா நோயாளி -உடலை எரிந்த டாக்டர் -கதற வைக்கும் காரணம் .

ஹாஸ்ப்பிட்டல் பில் கட்ட முடியாமல் இறந்த கொரானா நோயாளியின் சடலத்தை ஒரு டாக்டர் சாலையில் வீசிய அவலம் நடந்துள்ளது.

இறந்த கொரானா நோயாளி -உடலை எரிந்த டாக்டர் -கதற வைக்கும் காரணம் .

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள பம்ரோலியில் உள்ள பிரியா பொது மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் ஜிதேந்திர படேல் பல கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார் .இந்நிலையில் அந்த டாக்டரிடம் கடந்த  புதன்கிழமையன்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை அவரின் உறவினர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அப்போது அவர்கள் கொஞ்சம் பணம் கட்டியதும் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர் .

ஆனால் அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் .அதன் பிறகு அவருக்கு கட்ட  வேண்டிய மீதி ஹாஸ்ப்பிட்டல் பணத்தை கட்ட சொல்லி அந்த மருத்துவமனை பில் கொடுத்தது .ஆனால் அந்த பணத்தை கட்டுவதற்கு அந்த முதியவரின் உறவினர்களிடம் பணமில்லை .அதனால் அவர்கள் என்ன செய்வதென்று விழித்து கொண்டிருந்தார்கள் ,மேலும் அவர்கள் அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்திடமும் இதை கூறினார்கள் .உடனே அதை கேட்டு கோபமுற்ற அந்த ஹாஸ்ப்பிட்டல் உரிமையாளர் டாக்டர் ஜிதேந்திர படேல் அந்த இறந்த முதியவரின் உடலை தூக்கி சாலையில் வீசினர் .இது பற்றி பொதுமக்கள் போலீசுக்கு தகவல்  சொன்னார்கள் .உடனே போலீசும் சுகாதார துறையினரும் வந்து ,கொரானா தொற்றுநோய்கள் சட்டத்தின்  விதிமுறையை மீறியதாக அந்த டாக்டர் ஜிதேந்திராவை கைது செய்தனர் .