சோதனைச்சாவடியில் காரை மடக்கிப்பிடித்த போலீசார்.. பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரை ஆபாச வார்த்தையால் திட்டிய மருத்துவர்!

சோதனைச்சாவடியில் காரை மடக்கிப்பிடித்த போலீசார்.. பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரை ஆபாச வார்த்தையால் திட்டிய மருத்துவர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அந்தந்த மாவட்ட எல்லைகளில் புதிதாக வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதே நடைமுறை தான் தேனி மாவட்டத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு தேவதானப்பட்டி காட்ரோடு, ஆண்டிபட்டி அரளியூத்து, லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சோதனைச்சாவடியில் காரை மடக்கிப்பிடித்த போலீசார்.. பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரை ஆபாச வார்த்தையால் திட்டிய மருத்துவர்!

இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து காவல் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேனியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் கார் வந்துள்ளது. அப்போது அந்த காரை நிறுத்துமாறு போலீசார் கூறியும், அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து அந்த காரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார், காரில் இருந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் சாலமன்ராஜா என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் மருத்துவரையும் அவருடன் வந்த 3 பேரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் படி கூறியுள்ளனர். அப்போது சாலமன்ராஜா போலீசாரை ஆபாச வார்த்தையில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.