“காருக்குள் கடத்தி கண்டபடி கட்டிப்பிடித்தாள்” -சிகிச்சையளிக்க சென்ற டாக்டரை சிக்க வைத்த பெண்கள் .

 

“காருக்குள் கடத்தி கண்டபடி கட்டிப்பிடித்தாள்” -சிகிச்சையளிக்க சென்ற டாக்டரை  சிக்க வைத்த பெண்கள் .

ஒரு டாக்டரை கடத்தி, அவரை பெண்களை விட்டு கட்டிப்பிடிக்க விட்டு, அதை வீடியோ எடுத்து  அவரிடம்  பணம் பறித்த கூட்டத்தை போலீசார் பிடித்தார்கள்.

“காருக்குள் கடத்தி கண்டபடி கட்டிப்பிடித்தாள்” -சிகிச்சையளிக்க சென்ற டாக்டரை  சிக்க வைத்த பெண்கள் .

குஜராத்தின் கெடா மாவட்டத்தில் உள்ள நாடியாட் சிவில் மருத்துவமனையில் 49 வயதான மருத்துவர் ஒருவர் பல நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார் .அவரிடம் பிர்புள்ள டார்ஜிங் என்ற பெண் தன்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தன்னுடைய வீட்டிற்கு சிகிச்சையளிக்க வருமாறு கேட்டார் .அதை உண்மையென நம்பிய அந்த டாக்டர் அந்த பெண்ணோடு செல்ல சம்மதித்து அவர் கொண்டு வந்த காரில் ஏறினார் .அப்போது அந்த காருக்குள் ஏற்கனவே இரண்டு பெண்கள் அந்த நோயாளியின் உறவினர்கள் என்று சொல்லி அமர்ந்திருந்தார்கள் .

டாக்டரை ஏற்றிக்கொண்டு அந்த கார் சிறுது தூரம் சென்றதும் ,அந்த காரிலிருந்த இரு பெண்களில் ஒருவர் தன்னுடைய ஆடைகளை களைந்து விட்டு அந்த டாக்டரை கட்டி பிடித்தார் .அதை  இன்னோரு பெண் வீடியோ எடுத்தார் .இந்த எதிர்ப்பாராத சம்பவத்தால் அந்த டாக்டர் நிலைகுலைந்து போனார் .பிறகு அந்த காரினை தாங்கள் போலீசார் என்று கூறிய மூன்று பேர் தடுத்து நிறுத்தினார்கள் .அப்போது காருக்குள் நடந்த அந்த கசமுசா காட்சியை  கண்டு அந்த போலீஸ் வேடமிட்ட நபர்கள் அந்த டாக்டரை மிரட்டினார்கள் .மேலும் அவர்கள் அவரை  கைது செய்யாமலிருக்க உடனடியாக ஐந்து லட்ச ரூபாய் கேட்டராகள் .ஆனால் அந்த டாக்டர் அதற்கு மறுத்ததும் கடைசியாக 1.25 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு அந்த பணத்தை கொடுத்தார் .ஆனால் அந்த  கூட்டம் அந்த வீடியோவை  காண்பித்து மீண்டும் பணம் கேட்டு அவரை மிரட்டியதில் அந்த டாக்டர் போலீசில் புகாரளித்தார் .போலலிசார்  வழக்கு பதிவு செய்து அந்த டாக்ட்டரை  மிரட்டி பணம் பறித்த பெண்கள் கூட்டத்தை கைது செய்தனர்.

“காருக்குள் கடத்தி கண்டபடி கட்டிப்பிடித்தாள்” -சிகிச்சையளிக்க சென்ற டாக்டரை  சிக்க வைத்த பெண்கள் .