“இந்த பாழாய்ப்போன கொரானாவால் நாப்பது லட்சம் போச்சே “-கடன் வாங்கி தருவதாக சொன்ன வங்கி ஊழியரிடம் ஏமாந்த டாக்டர்..

“இந்த பாழாய்ப்போன கொரானாவால் நாப்பது லட்சம் போச்சே “-கடன் வாங்கி தருவதாக சொன்ன வங்கி ஊழியரிடம் ஏமாந்த டாக்டர்..

புனேவில், பிம்ப்ரி சின்ச்வாட்டின் அகுர்டியில் ஒரு மருத்துவர் தன்னுடைய மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவர் தன்னுடைய மருத்துவமனையை விரிவுபடுத்த விரும்பியதால் வங்கியில் கடன் வாங்க விரும்பினார்.
ஆனால் கொரானா பரவலின் காரணமாக அந்த டாக்டர் பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமலிருந்தார் .அப்போது ஒரு பிரபல வங்கியின் ஊழியர் என்று ஒருவர் அந்த டாக்டரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .அவர் அந்த டாக்டரிடம் நீங்கள் வங்கிக்கே வரவேண்டாமென்றும் ,காருக்குள்ளே காத்திருங்கள் என்றும் ,மேலும் கடன் சம்பந்தப்பட்ட டாக்குமென்டுகளையும் ,டெபாசிட் தொகை 40 லட்சமும் என்னிடம் கொடுங்கள் நான் இப்போதே நீங்கள் கேட்கும் எட்டு கோடி கடனை வாங்கி தருகிறேன் என்று கூறினார் .

“இந்த பாழாய்ப்போன கொரானாவால் நாப்பது லட்சம் போச்சே “-கடன் வாங்கி தருவதாக சொன்ன வங்கி ஊழியரிடம் ஏமாந்த டாக்டர்..
அவரின் பேச்சை நம்பிய அந்த டாக்டர் வங்கிக்குள் போகாமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தபடியே அவர் கேட்ட டாகுமெண்ட்டை கொடுத்துவிட்டு மற்றும் அவர் கேட்ட நாப்பது லட்ச ரூபாயினையும் அவர் சொன்ன அக்கௌண்டுக்கும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு போய் விட்டார் .
சிலநாட்கள் கழித்து கடன் விவரம் கேட்க அந்த நபரை தொடர்பு கொண்ட டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .ஆம் அந்த நபரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது .மேலும் அவரைப்பற்றி அந்த வங்கிக்கு போன் செய்த போது அப்படி ஒரு நபர் அங்கு வேலைசெய்யவில்லை என்று கூறினார்கள் .அப்போதுதான் அந்த டாக்டருக்கு தான் நன்றாக ஏமாற்றப்பட்டது தெரிந்தது .இந்த கொரானா பயத்தில் வெளியே சென்று அவரை பற்றி விசாரிக்காமல், இப்படி நாப்பது லட்சத்தை ஏமாந்து விட்டோமே என்று உணர்ந்த டாக்டர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு காத்திருக்கிறார்.

“இந்த பாழாய்ப்போன கொரானாவால் நாப்பது லட்சம் போச்சே “-கடன் வாங்கி தருவதாக சொன்ன வங்கி ஊழியரிடம் ஏமாந்த டாக்டர்..