பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை… வெளிநாடு தப்பிய டாக்டர்… ஓராண்டுக்கு பின் ஏர்போர்ட்டில் சிக்கினார்

 

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை… வெளிநாடு தப்பிய டாக்டர்… ஓராண்டுக்கு பின் ஏர்போர்ட்டில் சிக்கினார்

சென்னை பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற டாக்டரை ஓராண்டு பிறகு சொந்த ஊர் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த பேகமும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த அஸ்வினும் (28) சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும் கொண்டாலாம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளனர். அப்போது, இருவரும் நட்பாக பழகியுள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. காதலில் கொடிகட்டி பறந்த இருவரும் பல இடங்களில் சுற்றியுள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அஸ்வின், பேகத்தை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே, படிப்பை முடித்துவிட்டு இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஆனால் இவர்களின் காதல் செல்போனில் தொடர்ந்துள்ளது. இதனிடையே, “திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம்’’ என பேகம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தட்டிக்கழித்த அஸ்வின், பேகத்தை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதையடுத்து, சேலம் டவுன் அனைத்து மகளிர் நிலையத்தில் பேகம் புகார் அளித்தார். இந்த புகார் கடந்த 2019 செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. இதன் புகாரின் பேரில் டாக்டர் அஸ்வின் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர். இதனிடையே, அஸ்வின் லண்டன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து அவரது தந்தையை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஆனாலும், லண்டனில் இருந்து அஸ்வின் வரவில்லை. இந்த நிலையில், அஸ்வினின் தந்தை நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி டாக்டர் அஸ்வின் லண்டனில் இருந்து இந்தியா வருவதாக சேலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பெங்களூரு விமான நிலையம் சென்ற சேலம் காவல்துறையினர் அஸ்வின் வருகைக்காக காத்திருந்தனர். இதையடுத்து, விமான நிலையம் வந்திறங்கிய அஸ்வினை காவல்துறையினர் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஸ்வின் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் டாக்டர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்ற டாக்டர் ஒரு வருடத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.