‘குறைந்தது’ எடப்பாடி பழனிசாமியின் ‘சொத்து மதிப்பு’ : ஏன் தெரியுமா?

 

‘குறைந்தது’ எடப்பாடி பழனிசாமியின் ‘சொத்து மதிப்பு’ :  ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் பழனிசாமி, 7வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத்தாக்கலை நேற்று எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதில் கடந்த தேர்தலை விட எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு குறைய என்ன காரணம் என்பதை காண்போம்.

‘குறைந்தது’ எடப்பாடி பழனிசாமியின் ‘சொத்து மதிப்பு’ :  ஏன் தெரியுமா?

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமி குடும்பத்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.14 கோடி. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4.66 கோடியாகும். ஆனால் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக பழனிசாமி தாக்கல் செய்துள்ள வேட்புமனு தாக்கலில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு ரூ.2.01 கோடி; அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4.68 கோடியாக உள்ளது. அதாவது சொத்து மதிப்பு கடந்த தேர்தலை விட குறைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது.

‘குறைந்தது’ எடப்பாடி பழனிசாமியின் ‘சொத்து மதிப்பு’ :  ஏன் தெரியுமா?

எடப்பாடி பழனிசாமியின் தாய், மகன், மருமகள் பெயரில் உள்ள சொத்துக்களும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மகனின் பெயரில் ரூ. 44லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்தும், 16 ஏக்கர் நிலமும் இருந்தன. மருமகள் பெயரில் ரூ.1.51 லட்சம் கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 1.8 ஏக்கர் நிலமும் இருந்தன.

‘குறைந்தது’ எடப்பாடி பழனிசாமியின் ‘சொத்து மதிப்பு’ :  ஏன் தெரியுமா?

இம்முறை முதல்வர் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் மகன், மருமகள் பெயரில் உள்ள சொத்து விவரங்கள் இடம்பெறவில்லை. தேர்தலுக்கான பிராமணப் பத்திரத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது மனைவி ராதா பெயர் மட்டுமே உள்ளது. மகள், மருமகளின் சொத்துக்களை இம்முறை குறிப்பிடாததே முதல்வரின் சொத்து குறைய காரணம். அத்துடன் விவசாயம் தன்னுடைய தொழில் என குறிப்பிட்டுள்ள முதல்வரின் பெயரில் விவசாய நிலம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.