விஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா?

 

விஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான ஒரு முடிவை கொடுத்திருக்கிறது.

ஒருநாள் டி20 டெஸ்ட் மூன்று வகையான போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2:1 எனும் கணக்கில் தொடரை வென்றது. அடுத்து நடந்த டி20 தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. ஆளுக்கு ஒரு தொடர் வென்றாகிவிட்டது. அடுத்து டெஸ்ட் தொடரை யார் வெல்கிறார்களோ அவர்களே சுற்றுப்பயணத்தின் மாபெரும் வெற்றியாளர்கள் என்ற இலக்கை நோக்கி இரு அணிகளும் போட்டியிட்டன.

விஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா?

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வென்றன. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் யார் வெல்வார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதில் இருவரின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. ஒன்று அஷ்வின், மற்றொருவர் விஹாரி. அந்த போட்டியில் இந்தியா தோற்று விடும் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் விஹாரி மிக மிக நிதானமாக ஆடி அந்த போட்டியை இரு அணிகளுக்கும் வெற்றி கிடைக்காமல் டிரா செய்தார். 161 பந்துகளைச் சந்தித்து வெறும் 23 ரன்களை எடுத்திருந்தார்.

டி20 போட்டிகளில் மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு விஹாரியின் ஆட்டம் சோர்வை அளித்திருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டியின் இயல்பே அப்படித்தான். பல தடைகளை மீறி தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை அளிக்க வேண்டும். விஹாரியின் ஆட்டம் அன்றைய தினத்தில் இந்த மெச்சத்தகுந்ததாக இருந்தது. போட்டி முடிந்ததும் விஹாரிக்கு மிக முக்கியமான ஒருவர் தகவல் இருந்தார். அவர் வேறுயாருமல்ல இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்.

விஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா?

அந்த போட்டி முடிந்ததும் அனுப்பப்பட்ட மெசேஜ்ஜில் ’மிக சிறப்பாக விளையாடினாய். மிக அருமையான ஒரு ஆட்டத்தை நான் பார்த்தேன்’ என்று இருந்ததாம். அதைக் குறிப்பிட்டு விஹாரி டிராவிட்டை புகழ்ந்து பல விஷயங்கள் பேசினார்.

இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ராகுல் டிராவிட். அவரே இந்திய இளம் வீரர்களை தயார் செய்வதில் மிக முக்கியப் பங்கு அளிக்கிறார். அதுவேதான் விஹாரியின் கருத்தாகப் பதிவு செய்திருந்தார்.

தன்னுடைய ஆட்ட நேர்த்திக்கு ராகுல் டிராவிட்டே காரணம் என்றும், அவர் பல இளைஞர்களை கிரிக்கெட்டில் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்று பாராட்டியிருந்தார். இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், அவர் ஓய்வுக்குப் பிறகும் பல சுவர்களை இந்திய கிரிக்கெட் அணிக்காக தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.