ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம் #IPL

 

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

 ஐபிஎல் கொண்டாட்ட மனநிலைக்கு ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறார்கள். நேற்று யாரோடு யார் எப்போது மோத விருக்கிறார்கள் எனும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகிவிட்டது,.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

முதல் போட்டியில் சென்ற ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் மும்பை இண்டியன்ஸூம் சென்னை சூப்பர் கிங்ஸூம் மோதுகின்றன. அதிரடியாக இந்த ஆட்டம் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சரி, 2008 அண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து எந்த ஆண்டில் எந்த அணி கோப்பையை வென்றது என்ற விவரங்களைப் பார்ப்போமா?

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2008: ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆண்டு. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, தோனி போன்ற கிரிக்கெட்டின் ஜாம்புவான்கள் தலைமையில் போட்டிகள் நடந்தன. இதன் முடிவு கடும் ஆச்சர்யமாக இருந்தது.

ஆம். இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 43 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயஸ் அணி, அந்த ரன்களை எளிதாகக் கடந்தது. யூசுப் பதான் 56 ரன்களைக் குவித்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

2008 ஐபிஎல் போட்டியின் தொடர் நாயகன் – ஷேன் வார்னே.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டத்தில் கில்கிறிஸ் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் Vs அனில் கும்ப்ளே தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர் அணியில் கிப்ஸ் அபாரமாக ஆடி 53 ரன்கள் எடுக்க, டீம் மொத்தம் 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணியில் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெக்கான் சார்ஜர்ஸ் கோப்பையைத் தட்டிச் சென்றது.

 இந்தத் தொடரின் நாயன் ஆடம் கில்கிறிஸ்ட்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2010 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய சிஎஸ்கேவில் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் ஆடி 57 ரன்கள் எடுக்க, டீம் 168 ரன்களைக் குவித்தது.  அடுத்து ஆடிய மும்பை இண்டியன்ஸ் டீமில் சச்சின் மட்டுமே 48 ரன்கள் எனச் சொல்லும்படி ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 146 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. ‘

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் சச்சின் டெண்டுல்கர்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2011 ஆம் ஆண்டு ஐபிஎல்  இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் வெட்டோரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய சிஎஸ்கே டீமில் மைக்கல் ஹசி, முரளி விஜய் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 205 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடியை ஆர்சிபி அணி 147 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் கிறிஸ் கெயில்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2012 ஆம் ஆண்டு ஐபிஎல்  இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய சிஎஸ்கே டீமில் மைக்கல் ஹசி, முரளி விஜய். சுரேஷ் ரெய்னா ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் 190 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் மிகத் திறமையான ஆட்டத்தால் 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் சுனில் நரேன்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ஆர்.ஜி.சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் டீமில் பொல்லார்ட்டின் அருமையான ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது அந்த அணி. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணியால், 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தோனி மட்டுமே 65 ரன்கள் எடுத்தார்.

இதனால், மும்பை இண்டியல்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் ஷேன் வாட்ஸன்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2014 ஆம் ஆண்டு ஐபிஎல்  இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ஜார்ஜ் பைய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 199 ரன்களைக் குவித்தது. ஆனால், அதிரடியாக அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம் மிச்சம் மூன்று பந்துகள் இருக்கும்போதே 200 ரன்களை எடுத்துவிட்டது.

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் மேக்ஸ்வெல்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2015 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் 202 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் 161 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால், மும்பை இண்டியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் ஆண்ரே ரஸல்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 208 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 200 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கிறிஸ்கெயில் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் முதன்முதலாக ஐபிஎல் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்தத் தொடரின் நாயகன் விராட் கோலி.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் Vs ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்கைண்ட்.

முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 129 ரன்கள் அடித்தது. ஆனால், அடுத்து ஆடிய புனே அணி 128 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் வென்றது.

இதனால், மும்பை இண்டியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் நாயகன் பென் ஸ்டோக்ஸ்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டீமி ஷேன் வாட்ஸன் 117 ரன்கள் விளாச, 9 பந்துகள் மிச்சமிருக்கையில் 181 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது சிஎஸ்கே.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

சென்ற ஆண்டு (2019) ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் Vs தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் 149 ரன்களைக் குவித்தது. ஆனால், அடுத்து ஆடியை சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி பந்து வரை போராடி 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஷேன் வாட்ஸன் மட்டுமே 80 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சொல்லும்படியாக ஆட வில்லை.

ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பை வென்ற அணிகள் எவை தெரியுமா? முழு விவரம்  #IPL

ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியில் சென்ற ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட அணிகளே மீண்டும் மோதுகின்றன. கேப்டன்களும் மாறவில்லை. எனவே ஆட்டம் வெகு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.