’பெண்கள் மட்டுமே கொண்ட குழு’ ஜோ பைடன் அமைத்தது எதற்கு தெரியுமா?

 

’பெண்கள் மட்டுமே கொண்ட குழு’ ஜோ பைடன் அமைத்தது எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் அடுத்த அதிபர் யார் என்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துவிட்டது. நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் 270 பெற வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகளைப் பெற்றுவிட்டார். ஆனாலும் ட்ரம்ப் அதிபர் பதவிலியிருந்து விலக பிடிவாதம் பிடித்து வந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடினார். பென்சில்வேனியா, ஜியார்ஜியா மாகாண முடிவுகள் மீள் பரிசீலனைக்குச் சென்றன. ஆனால், அவையும் ஜோ பைடனுக்குச் சாதகமாகவே வந்தன.

’பெண்கள் மட்டுமே கொண்ட குழு’ ஜோ பைடன் அமைத்தது எதற்கு தெரியுமா?

இனியும் அடம்பிடிப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த ட்ரம்ப், தன்னிடம் உள்ள அதிபருக்கான அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றிக்கொடுக்க ஒத்துழைப்பு தருவதற்கு சம்மதித்தார்.

’பெண்கள் மட்டுமே கொண்ட குழு’ ஜோ பைடன் அமைத்தது எதற்கு தெரியுமா?
Jen Psaki

இந்நிலையில், செய்தியாளர் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் ஜோ பைடன். தமது நிர்வாகத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்க குழுவின் தலைவியாக ஜென் சாகியைத் தேர்வு செய்திருக்கிறார். தலைமை மட்டும் பெண்ணுக்கு இல்லை. இந்தக் குழு உறுப்பினர்கள் அனைவருமே பெண்கள்தான்.

துணை அதிபருக்கு கமலா ஹாரீஸ் எனும் பெண் தேர்வாகியிருக்கும் நிலையில் இப்படி ஒரு பெண்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதோடு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.