ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

 

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

தூக்கம் பற்றிப் பேசுவதற்கு ஏராளம் இருக்கிறது. ஏனெனில், இந்த லாக்டெளனில் பெரும்பாலானவர்களின் முதல் பிரச்னை தூக்கமின்மைதான்.

எப்போது இந்த லாக்டெளன் முடியும்… வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள்… வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல்… புதிய நபர்களைச் சந்திக்கும்போது இருக்கும் தயக்கம்… எதன் வழியே கொரோனா வைரஸ் தொற்றுமோ என்ற அச்சம் உள்ளிட்ட ஏராளமான காரணங்களால் தூக்கம் வருவது தாமதமாவது இயல்பாகி விட்டது.

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

தூங்குவதற்கே வெகு நேரமாகி விடுவதால் எழுந்திருப்பதும் தாமதமாகி விடுகிறது. அதனால் திட்டமிட்டப்படி வேலையை முடிப்பதில் சிக்கல். இதனால் வேலை செய்யும் இடத்தில் பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல். அதனாலும் மனச்சோர்வு அடைபவர்கள் ஏராளாம்.

அந்த மனச்சோர்வு தூங்கும் நேரத்தை இன்னும் தள்ளிப்போடவே செய்யும். எனவே, பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளையே முதலில் ஆராய்ந்து தீர்வு காணுங்கள்.

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

இப்போது நாம் பார்க்கபோவது, லேட்டாக விழிக்கிறோம் என்பதற்காக போன் அல்லது கடிகாரத்தில் அலாரம் செட் பண்ணியிருப்போம் அல்லவா… அந்த அலாரத்தின் ஒலி உங்களின் மனநிலையை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள RMT  யுனிவர்சிட்டியின் ஆய்வு கூறுகிறது.

அலாரத்தில் ஒலியில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அதிக சத்தத்தோடு ஒலிப்பது. மற்றொன்று, எப்போதும் கேட்பதுபோல இதமாக ஒலிப்பது.

சத்தமாக அலாரம் ஒலியைத்தான் பலரும் வைப்பர்கள். ஏனெனில், அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் நம்மை எழுப்ப அதுவால்தான் முடியும் என நினைக்கிறார்கள். மேலும் இதமான ஒலி எனும்போது ஏதோ பாட்டு ஒலிக்கிறது என மீண்டும் தூங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

ஆனால், பயங்கர சத்தம் கேட்டு திடுமென பதற்றத்தோடு எழுந்திருப்பவர்களுக்கு அந்தப் பதற்றமான மனநிலை அடுத்த நான்கு மணி நேரத்திற்கு இருக்குமாம்.

அந்த நான்கு மணி நேரத்தில் அவர் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் அந்தப் பதற்றம் வெளிப்படுமாம். அந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டுவது ஆபத்தில் முடியக்கூட வாய்ப்பிருக்கிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், காலையில் வேலை தொடங்குவதே மீட்டிங்கில்தான். அதை இந்தப் பதற்ற மனநிலையில் எதிர்கொண்டால் எப்படிச் சரியாக இருக்கும். தெளிவாகப் பதில் சொல்வதற்குக்கூட பதற்றம் கொள்ளக்கூடும்.

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

இதமான ஒலி அலாரம் கேட்டு எழுந்திருப்பவர்கள் பெரும்பாலும் பதற்றத்தோடு எழுந்திருப்பதில்லை. இயல்பான மனநிலையில் இருப்பதால் அது அவர்கள் செய்யும் வேலையிலும் வெளிப்படுகிறது. அலாரம் இல்லாது இயல்பாக எழுந்திருப்பவர்களைப் போல வேலைகளில் ஈடுபட முடிகிறது.

எனவே, நீங்கள் அலாரம் செட் செய்யும் நேரம் மட்டுமல்ல, என்ன அலாரம் ஒலி என்பதைத் தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், ஒருநாளின் தொடக்கத்தை முடிவு செய்யப்போவது அது.

அலாரத்திற்கு அவசியம் இல்லாது, சரியான நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கவும் பழகினால் இந்தத் தொல்லை இருக்காது.

ஒருநாளின் மனநிலைக்கு அலாரத்தின் ஒலியும் முக்கியக் காரணம் தெரியுமா?

தூக்கம் வராதவர்கள் அதற்கேற்ற உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளலாம். எளிதான உடற்பயிற்சிகள், யோகாசனம் செய்யலாம். மனத்தை அமைதிப்படுத்தும் தியானம் செய்ய பழகலாம்.

இப்படியெல்லாம் செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், மருத்துவரைச் சந்தித்து உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கலாம். அப்படியே ஏதேனும் இருக்கும்பட்சத்தில் கூட தூக்கம் வருவது தள்ளிப்போகலாம்.