3 நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பயணிகள் எவ்வளவு தெரியுமா?

3 நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பயணிகள் எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் அனைவரும் பாரம்பரியப்படி புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . அதேபோல் அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிய தொடங்கியுள்ளனர்.

3 நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பயணிகள் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9 ஆயிரத்து 510 பேருந்துகளும், மற்ற ஊர்களிலிருந்து 5,247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்பட்டன.

3 நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பயணிகள் எவ்வளவு தெரியுமா?

இதில் கடந்த 3 நாட்களில் 4 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம் செய்திருப்பதாகவும், இது கடந்த ஆண்டை விட குறைவு என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் பயணித்ததாக தெரிகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அச்சத்தாலும், பொருளாதார சரிவினாலும் மக்கள் சொந்த ஊர் பயணத்தை தவிர்த்துள்ளனர்.