மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்! – மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்! – மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், சில மாநிலங்கள் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கும் தடை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், விளை பொருட்கள், உற்பத்தியான பொருட்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் தேங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பொருளாதாரம் பதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்! – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த போது இ-பாஸ் இனி தேவையில்லை என்று கூறியிருந்தது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இ-பாஸ் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்! – மத்திய அரசு அறிவுறுத்தல்

அதில், “மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டாம், மாநிலங்களுக்கு இடையையும் மாநிலங்களுக்கு உள்ளேயும் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. சில மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது. அவற்றைப் போக்க வேண்டும். மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கை காரணமாக, வேலை வாய்ப்பு தடைப்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது” மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.