நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த சூழலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு உண்டு என திமுக அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியிருந்தார்.இதனிடையே தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள 8 உறுப்பினர்கள் கடந்த 10ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்த போது அதிமுக மௌனம் காத்தது. அதனால் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறோம் என்றார்.