நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் தி.மு.க இளைஞரணி – மாணவரணியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் தி.மு.க இளைஞரணி – மாணவரணியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டத்தில் திமுக இளைஞரணி, மாணவரணியினர் பல்வேறு இடங்களில் இன்று கருப்புகொடி ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மாணவர்களின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் உள்ள மருத்துவ படிப்பு கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சளுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும், இந்தியை கட்டாயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வீடுகளின் முன் கருப்பு கொடி உடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் தி.மு.க இளைஞரணி – மாணவரணியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் சுப்பிரமணி பொருளாளர் பி. கே பழனிச்சாமி , பகுதி செயலாளர் செல்வராஜ் உள்பட இளைஞரணி மாணவரணி நிர்வாகிகள் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சோலார் பகுதியில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கே.இ.பிரகாஷ் தலைமையில் இளைஞரணி மாணவரணி நிர்வாகிகள் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .

முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி பகுதி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அவர்கள் வீட்டின் முன்பு கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்ட இடங்களில் கையில் கருப்பு கொடிகளுடன் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானிசேகர் தலைமையில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.