அறிவாலயத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்!

 

அறிவாலயத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங்கிய திமுக, இன்று காலை 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே 173 வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார். தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக தன்னுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு எஞ்சியுள்ள தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது.

அறிவாலயத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்!

கூட்டணிக் கட்சிகள் விரைவில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களுக்கு முன்னரே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. வேட்பாளர் பட்டியலை பொறுத்தமட்டில் திமுக தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் பல சிக்கல்கள் நீடிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டாமென தொண்டர்கள் போராடியது ஸ்டாலினை அப்செட் அடையச் செய்து விட்டதாம். அதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

அறிவாலயத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்!

ஒரு வழியாக சஸ்பென்ஸை திமுக இன்று உடைத்து விட்டது. திமுகவின் 173 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் விரைவில் பரப்புரையை தொடங்கவிருக்கிறார். இந்த நிலையில், அந்த 173 பேர் தான் வெற்றி வேட்பாளர்கள் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள், திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.