’54 ஆண்டுகளுக்கு பிறகு’… பேராவூரணி தொகுதியில் சம்பவம் செய்த திமுக!

 

’54 ஆண்டுகளுக்கு பிறகு’… பேராவூரணி தொகுதியில் சம்பவம் செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக தான் வெல்லும் என கணிக்கப்பட்டிருந்த தொகுதிகளிலெல்லாம் திமுக வெற்றிக் கொடியை நாட்டியது மட்டுமல்லாமல், அதிமுக அமைச்சர்கள் பலரை ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு உதயசூரியனை உதிக்க வைத்துள்ளது. திமுகவின் இந்த இமாலய வெற்றி, பிற அரசியல் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

’54 ஆண்டுகளுக்கு பிறகு’… பேராவூரணி தொகுதியில் சம்பவம் செய்த திமுக!

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, இந்த தேர்தலில் திமுக செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், பேராவூரணி தொகுதியில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி வெற்றிக் கொடியை பறக்க விட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

’54 ஆண்டுகளுக்கு பிறகு’… பேராவூரணி தொகுதியில் சம்பவம் செய்த திமுக!

பட்டுக்கோட்டை தொகுதியில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட பேராவூரணி தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு கிருஷ்ணமூர்த்தி வெற்றி வாகையை சூடினார். 1971 ஆம் ஆண்டு அவர் மீண்டும் போட்டியிட்டார். அப்போது தோல்வியை சந்தித்தார். இந்த தோல்விக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் வரை, திமுகவால் அந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் கூட ஒருமுறை அங்கு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை.

’54 ஆண்டுகளுக்கு பிறகு’… பேராவூரணி தொகுதியில் சம்பவம் செய்த திமுக!

இந்த நிலையில் தான், பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் அசோக்குமார் களமிறங்கினார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தத்தை விட 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 1967ஆம் ஆண்டு பேராவூரணி தொகுதியில் வெற்றி வாகையை சூடிய கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் தான் அசோக்குமார். 54 ஆண்டுகளுக்கு பிறகு மாமனார் வென்ற தொகுதியை மருமகன் கைப்பற்றிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.