திமுக vs அதிமுக : மண்டலம் வாரியாக முன்னிலை!

 

திமுக vs அதிமுக : மண்டலம் வாரியாக முன்னிலை!

தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. இந்த சூழலில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட ஒருமாத இடைவெளிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திமுக vs அதிமுக : மண்டலம் வாரியாக முன்னிலை!

குறிப்பாக அதிமுக அமைச்சர்களில் 15 பேர் முன்னிலையில் உள்ளனர். எட்டு அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ,ஓ பன்னீர்செல்வம் ,திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ,தங்கமணி ,வேலுமணி, கே.பி. அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.ஓ.எஸ் மணியன், கே,ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன், ஆர்.பி .உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி ,ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அமைச்சர் ஜெயக்குமார் ,சி.வி. சண்முகம், எம். சி. சம்பத், காமராஜ், பெஞ்சமின், பாண்டியராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வி.எம் .ராஜலட்சுமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்

திமுக vs அதிமுக : மண்டலம் வாரியாக முன்னிலை!

இந்நிலையில் தென்மண்டலத்தில் திமுக 32, அதிமுக 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. வடக்கு மண்டலத்தில் திமுக 57 தொகுதிகளிலும், அதிமுக 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் மத்திய மண்டலத்தில் திமுக 32, அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் மேற்கு மண்டலத்தில் அதிமுக 29, திமுக 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.