இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் – ஸ்டாலின் உறுதி!

 

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் – ஸ்டாலின் உறுதி!

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனர்.

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் – ஸ்டாலின் உறுதி!

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “அறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர் அன்பழகன் ஏற்றிருந்த வரலாற்றுக்குரிய பொறுப்பை துரைமுருகன் சுமந்து உள்ளார். அதேபோல் டி.ஆர். பாலு ஏற்றுக்கொண்டுள்ள பொருளாளர் பொறுப்பு தலைவர் கருணாநிதி அவர்களும், எம்ஜிஆர் அவர்களும் ஏற்றுக் கொண்ட பொறுப்பு.

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் – ஸ்டாலின் உறுதி!

துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதையும்
டி. ஆர். பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். துரைமுருகனும், டி. ஆர். பாலுவும் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். ஒன்பது முறை சட்டப்பேரவைக்கு தேர்வாகி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் துரைமுருகன். மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர். பாலு. வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவராக கருணாநிதியால் பாராட்டப் பெற்றவர் பாலு. கருணாநிதிக்கு சாரதியாக இருந்து சிறை சென்றவர் டி.ஆர். பாலு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், துரைமுருகன் என்றால் கனிவு, டி. ஆர். பாலு என்றால் கண்டிப்பு என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ற உங்கள் இருவரின் ஆற்றலும் கழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படட்டும். இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று கூறினார்.