விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்!

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கியுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்பதே இல்லாமல் போய்விடும் என அச்சம் தெரிவித்தனர். ஆனால் இதனை மறுத்த மத்திய அரசு, விவசாயிகளை காக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும் இந்த சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றும் தெரிவித்தது.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்!

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட இந்த வேளாண் மசோதாக்களுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக தோழமை கட்சிகள் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்!

அந்த வகையில், காஞ்சிபுரம் கீழ் அம்பியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை துண்டு, மாஸ்க் அணிந்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ளார். முன்னதாக கீழ் அம்பியில், வயலில் இறங்கிய ஸ்டாலின் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் உரையாடினார்.