திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்; முக்கிய தகவல் உள்ளே!

 

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்; முக்கிய தகவல் உள்ளே!

திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அந்த சமயம் திமுகவின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் காலமானார். அதனால் அந்த பதவி துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது.

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்; முக்கிய தகவல் உள்ளே!

இதனையடுத்து திமுக பொது செயலாளரை தேர்வு செய்ய, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் பதவிக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கும் அக்கட்சியினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த நிலையில், திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு ரூ.1,000 செலுத்தி இன்று முதல் வேட்பு மனு பெறலாம் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடுள்ளார்.

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்; முக்கிய தகவல் உள்ளே!

மேலும், வரும் 5 ஆம் தேதி மதியம் 1 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம் என்றும் வேட்பு மனுதக்கால் அன்று முடிந்தவுடன் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் பதவிக்கு போட்டியிடுவோரை 5 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழியை வேண்டும் என்றும் அதன் படி 9 ஆம் தேதி திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.