உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை… மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

 

உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை… மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின், நேற்று சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தின் முடிவில் வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் ஸ்டாலின் உயரதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல் பற்றிய செய்திக் குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை… மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

அதில், ‘தற்போது மாநிலத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்கல் குறித்த விபரங்களை கேட்டறிந்து அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும் இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்யவும் வரும் சில நாட்களில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி அதிகரிப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதை கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள பணி அலுவலர்களை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.