`மத்திய அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து!’- விவசாயிகளை திரட்டி களமிறங்கியது திமுக

 

`மத்திய அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து!’- விவசாயிகளை திரட்டி களமிறங்கியது திமுக

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கைக்கு அடக்கமானதாக மாற்றியுள்ள இச்செயலை கண்டித்து விவசாயிகளின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது.

`மத்திய அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து!’- விவசாயிகளை திரட்டி களமிறங்கியது திமுக

காவிரி ஆணையத்தை ஜலசக்தி அமைச்சகத்துடன் இணைப்பதை கைவிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திமுக விவசாய அணி, தமிழ்நாடு விவசாய சங்கம், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் தொடங்கியுள்ளது. திருச்சியில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தொடங்கி வைத்துள்ளார். திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள நேரு அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் விவசாய சங்கத்தினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், ”மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக காவிரி விவகாரத்தை மத்திய அரசு தற்பொழுது கையில் எடுத்திருக்கிறது. காவிரி என்பது வெறும் ஆறு அல்ல. தமிழக மக்களின் உயிர்நாடி. இதனை தடுத்து நிறுத்த கர்நாடக அரசும் மத்திய அரசும் துடித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்து, தமிழ்நாட்டிற்கு ஊறு விளைவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு விரோதமாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கைக்கு அடக்கமானதாக மாற்றியுள்ளது.

`மத்திய அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து!’- விவசாயிகளை திரட்டி களமிறங்கியது திமுக

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னதிகாரமுள்ள அமைப்பாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் கீழமை அலுவலகமாக, மோடியின் அரசு மாற்றியுள்ளது. இந்த அநீதியை கண்டிக்க வேண்டிய தமிழ்நாடு அரசோ, இதை ஆதரித்திருப்பதோடு, இதனால் ஆபத்தில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது வேதனையாக இருக்கிறது” என்றார்.