திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளின் விவரம்!

 

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளின் விவரம்!

தமிழக தேர்தலை முண்ணனி கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. திமுக கூட்டணியில் உள்ளா மதிமுக 10 தொகுதிகள் வரை எதிா்பாா்த்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 6 இடங்களை திமுக ஒதுக்கியது.

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளின் விவரம்!

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மதிமுகவுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர்(தனி), மதுராந்தகம்(தனி), அரியலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.