ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

 

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இளங்கலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

அதனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதனிடையே உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, ஆளுநர் தரப்பில் இருந்து 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டி.ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில், ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அதிமுக அரசு தவறியதை கண்டித்தும் ஆளுநர் அவகாசம் கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.