‘நடிகர் விவேக்கின் கனவை நினைவாக்க’… களமிறங்கும் திமுக!

 

‘நடிகர் விவேக்கின் கனவை நினைவாக்க’… களமிறங்கும் திமுக!

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. அப்துல் கலாமின் தீவிர ரசிகரான விவேக், அவரது வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் முயற்சியில் களமிறங்கினார்.

‘நடிகர் விவேக்கின் கனவை நினைவாக்க’… களமிறங்கும் திமுக!

கிட்டத்தட்ட 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட விவேக்கின் முயற்சி, பாதியிலேயே நின்று விட்டது. விவேக் விட்டுச் சென்ற பணியை தற்போது அவரது ரசிகர்களும் தன்னார்வலர்களும் இளைஞர்களும் மாணவர்களும் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், நடிகர்கள் மற்றும் நடிகைகளும் கூட விவேக்கின் கனவை நினைவாக்க தங்களது வீடுகளிலேயே மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

‘நடிகர் விவேக்கின் கனவை நினைவாக்க’… களமிறங்கும் திமுக!

இந்த நிலையில், விவேக்கின் ‘ஒரு லட்சம் மரம் நடும்’ கனவை நினைவாக்க திமுகவின் சுற்றுச்சூழல் அணி களமிறங்கவுள்ளது. மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரக்கன்று நடும் பணியை திமுக மேற்கொள்ளுமென அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயன் சேனாதிபதி அறிவித்துள்ளார்.