வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவார்கள் என்றும் கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது . பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணித் தலைவர் உதயநிதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி மர்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் சட்ட ரீதியாக செல்லாது என அறிவிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.