” தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர்” கனிமொழி எம்.பி. பதிலடி!

 

” தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர்” கனிமொழி எம்.பி. பதிலடி!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை தூத்துக்குடி எம்.பி.கனிமொழி இன்று ஆய்வு செய்தார். அத்துடன் இந்து அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

” தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர்” கனிமொழி எம்.பி. பதிலடி!

இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, சூரங்குடி கூட்டுறவு நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரணத் தொகையான 2000 ரூபாயை மக்களுக்கு வழங்கினார்.

” தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர்” கனிமொழி எம்.பி. பதிலடி!

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, ” தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்து இருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல; மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்றார்.