நடிகர் தவசியின் மருத்துவ செலவை ஏற்ற திமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

 

நடிகர் தவசியின்  மருத்துவ செலவை ஏற்ற திமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

நடிகர் தவசியின் மருத்துவ செலவை திமுக எம்எல்ஏ சரவணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நடிகர் தவசியின்  மருத்துவ செலவை ஏற்ற திமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நான் கடவுள், ஜில்லா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. பஞ்சாயத்து சீன்கள், பூசாரி என இவரின் கதாபாத்திரம் ரசிக்கும் படியாக இருக்கும். பெரிய மீசையுடன் கம்பீரமாக இருந்த இவருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் மெலிந்து அடையாளம் தெரியாதவாறு காட்சியளிக்கிறார்.

நடிகர் தவசியின்  மருத்துவ செலவை ஏற்ற திமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

இந்நிலையில் நடிகர் தவசி மருத்துவ செலவை திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவும் மருத்துவரான சரணவன் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் அவருடைய சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச சிகிச்சையை அவர் அளித்து வருகிறார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில், காமெடி நடிகர் தவசிக்கு எங்கள் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். புற்றுநோய் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவை எங்கள் சூர்யா தொண்டு நிறுவனமே ஏற்றுள்ளது. என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மருத்துவரும் எம்எல்ஏவுமான சரவணனின் சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.