வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ!

வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, சஸ்பென்ஸாக வைத்திருந்த வேட்பாளர் பட்டியலை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட 70 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ!

இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடமும் கூட திமுக கெடுபிடி காட்டியது. இந்த தேர்தலில் வெல்லத் துடித்துக் கொண்டிருக்கும் திமுக, ஐபேக் எடுத்த சர்வேயின் அடிப்படையிலேயே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுத்தது. அதிலும் பல பிரச்னைகள் எழுந்தது. இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை கொடுக்க வேண்டாமென திமுக நிர்வாகிகள் பலர் திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்தார்கள்.

வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ!

அதை மீறி, கூட்டணி கட்சிகளுக்கு திமுக போட்டியிடவிருந்த சில இடங்கள் கொடுக்கப்பட்டு விட்டது. இது திமுக நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்படி அதிருப்தி அடைந்தவர்களுள் ஒருவர் தான் திமுக எம்.எல்.ஏ சரவணன். கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவானார். அந்த தொகுதி இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ!

இதனால் அதிருப்தி அடைந்த சரவணன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறாராம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட 20 எம்.எல்.ஏக்களுள் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது.