காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு; திமுக எம்.எல்ஏ இதயவர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்!

 

காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு; திமுக எம்.எல்ஏ இதயவர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியின் அமமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தியை திருப்போரூர் திமுக எம்.எல் ஏ இதயவர்மன், தான் அனுமதிபெற்று வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு; திமுக எம்.எல்ஏ இதயவர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே இதயவர்மனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறையினர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரை நேரில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டனர். இந்த நிலையில், திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.