முதல்வர் பழனிசாமியுடன் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா திடீர் சந்திப்பு!

 

முதல்வர் பழனிசாமியுடன்  திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா திடீர் சந்திப்பு!

முதல்வர் பழனிசாமியை சந்தித்து திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா மனு அளித்தார்.

திருவாரூரில் முதல்வர் பழனிசாமி மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்த ஆய்வு கூட்டத்திற்கு மன்னார்குடி திமுக டி.ஆர்.பி ராஜா வருகை புரிந்தார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் தான் அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மனு அளிக்க வந்தது தெரியவந்தது. பின்னர் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். அதில் பாதாள சாக்கடை திட்டம் ,நீடாமங்கலம் ரயில்வே மேம்பால பணி உள்ளிட்டவை குறித்து முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் பழனிசாமியுடன்  திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா திடீர் சந்திப்பு!

தர்மபுரியில் முதல்வர் பழனிசாமி சந்திக்க திமுக எம்பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருவாரூரில் திமுக பிரதிநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.