திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு : மு.க. ஸ்டாலின் கண்டனம்!

 

திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு : மு.க. ஸ்டாலின் கண்டனம்!

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் என்பவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.சொத்துத் தகராறு காரணமாக நடந்த இந்த கொலையில் அதிமுக பிரமுகர் திருமண வேல் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேடப்பட்டு வந்த திருமண வேல், முத்து கிருஷ்ணன் இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகத் தூத்துக்குடி எஸ்பி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு : மு.க. ஸ்டாலின் கண்டனம்!

இதனிடையே செல்வன் கொலையை கண்டித்து சொக்கன் குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் நடந்தது. தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் காரை தாக்கிய ஜின்னா, செல்வ விநாயகம் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு : மு.க. ஸ்டாலின் கண்டனம்!

இந்நிலையில் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ள அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் டிஜிபி திரிபாதி தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, காவல்துறை நடுநிலை தவறாமல் எவர் பக்கமும் சாய்ந்துவிடாமல் செயல்பட வேண்டும் என்றும் இளைஞர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நிவாரண மாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.