திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் அடித்து நொறுக்கப்பட்டது!

 

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் அடித்து நொறுக்கப்பட்டது!

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து நொறுக்கப்பட்டது. செல்வன் கொலையை கண்டித்து சொக்கன் குடியிருப்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில் தாக்குதல் நடந்தது. தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் காரை தாக்கியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் அடித்து நொறுக்கப்பட்டது!

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் என்பவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் அடித்து நொறுக்கப்பட்டது!


சொத்துத் தகராறு காரணமாக நடந்த இந்த கொலைக்கும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்த நிலையில் அவர் மீது 4 பிரிவுகளில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் காவலரை பணிநீக்கம் செய்யாமல் ஆயுதப்படைக்கு மாற்றியதால் அப்பகுதி மக்கள் போரட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.