மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் : மு.க.ஸ்டாலின்

 

மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் : மு.க.ஸ்டாலின்

மனித உரிமை தினத்தை கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் : மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைக்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவொருபுறமிருக்க, வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா முழுவதும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்! #COVID19 காலத்தில் ஏழைகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்!
உரிமைகள் பட்டப்பகலில் பறி போகின்றன. #HumanRightsDay-வை கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்? மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.