அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு ஆபத்து – மு.க. ஸ்டாலின்

அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு ஆபத்து – மு.க. ஸ்டாலின்

அண்ணாவின் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு ஆபத்து – மு.க. ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளாக இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இந்நிலையில் பேரவையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், “அண்ணாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அதை காப்பாற்ற உறுதியேற்போம். இருமொழி கொள்கை கொண்டு வந்ததுடன், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா ” என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு ஆபத்து – மு.க. ஸ்டாலின்

முன்னதாக அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டப்படும் நிலையில் அண்ணாவின் சிலைகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர ஓபிஎஸ், திமுக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்திவிட்டு பின் சட்ட பேரவை கூட்ட தொடருக்கு சென்றது கவனிக்கத்தக்கது.